‘12த் ஃபெயில்’ உரிமையை கைப்பற்றிய சூர்யாவின் 2டி.
1700053537824

நடிகர் சூர்யா நடிகர் என்பதை கடந்து 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலமாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வரும் சூர்யா தற்போது இந்தியில் வெளியான 12த் ஃபெயில் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி வெளியான 12த் ஃபெயில் படத்தை பாலிவுட் இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். இந்த படம் பண்ணிரெண்டாம் வகுப்பில் ஃபெயில் ஆன மணிஷ் சர்மா என்பவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்பதை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. அதன் உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.