‘பொல்லாதவன்’ 15 ஆண்டுகள் நிறைவு; வெற்றி கூட்டணியின் ரீ யூனியன் கொண்டாட்டம்.

photos

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணி முதன் முதலாக கைகோர்த்த படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத இமாலய வெற்றி கண்டது.  

photos

பல்சர் பைக்கை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது, இதனாலேயே படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூட சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து பல்சர் பைக் தமிழ்நாட்டு இளைஞர்களால் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது.

photos

இந்நிலையில் பொல்லாதவன் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து தனுஷ், வெற்றி மாறன் மற்றும் திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். தற்பொழுது கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

photo

அந்த சமயத்தில் படத்தின் பாடல்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட், அதிலும் குறிப்பாக படத்தின் பி ஜி எம் பற்றி சொல்லவே தேவையில்லை, ஏனென்றால் அந்த சமயத்தில் வெளிவந்த  பல்சரில் பிரேக் மற்றும் ஒலி எழுப்பானாக  பலருமே இந்த பி ஜி எம் –ஐ தான் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

photos

Share this story