16 years of அயன்.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்...!

surya

சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான அயன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா.  தற்போது சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கல்ட் கிளாசிக் படமாக தயாராகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.


இந்த நிலையில் சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் அயன். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அந்த நாளை கொண்டாடும் விதமாக சூர்யா ரசிகர்கள் அயன் படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர். பெரிய கமெர்ஷியல் ஹிட்டான அயன் திரைப்படம், 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷனை அள்ளிய திரைப்படமாகவும் மாறியது. அதுமட்டுமில்லாமல் 200 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமும் கூட. தெலுங்கு மறும் கேரளாவில் 100 நாள்களை தாண்டி ஓடி அங்கும் சாதனை படைத்த படம் தான் அயன்.

 
கேவி ஆனந்தின்  ஃபிரஷான ஸ்க்ரீன் ப்ளே, ஹாரீஸ் ஜெயராஜின் மியூஸிக் , அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்து ரசிக்கும் படியாக அமைந்தது. ஒரு மெகா ப்ளாக்பஸ்டர் படமாக சூர்யாவின் கெரியரில் அயன் திரைப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story