விரைவில் கூட்டணி அமைக்க இருக்கும் SK & AR முருகதாஸ் – ஆகா….செம தகவலா இருக்கே!.

photo

ரசிகர்களின் பேராதரவோடு நடந்த ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பக்கா மாஸ்ஸான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

photo

இந்த விழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்து, ஒரு நல்ல மோட்டிவேஷனல் ஸ்பீச்சாகவும் அமைந்துள்ளது, அதில் அவர் கூறியதாவது “ ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ படத்திற்கான இசைவெளியீட்டு விழாவிற்கு நான்தான் ஸ்கிரிப்ட் பணிகளை செய்தேன். அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ்ஸின் தயாரிப்பில் வெளிவந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஆடியோலான்ச் விழாவை தொகுத்து வழங்கினேன். தொடர்ந்து அவர்கள் தயாரித்த ‘மான் கராத்தே’ படத்தின் ஹீரோ நான்தான்; இன்று அவரது ‘1947 ஆகஸ்ட் 16’ படத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன், ஆனால் இன்னும்  ஒரு படி உள்ளது அது விரைவில் நடக்கும் என கூறினார்” இந்த பேச்சைகேட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

photo

காரணம் அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் நடிக்கபோவதைதான் அப்படி கூறுகிறார். என்பதை கனகச்சிதமாக கேச் செய்துள்ளனர் ரசிகர்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் மக்களே!

Share this story