ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்..

jayam ravi

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘டாடா’ இயக்குனர் கணேஷ்பாபு இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் 2 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும், அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை ’டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்றும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

mjayam ravi
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் ரத்னகுமார் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ’ஆடை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் பணிபுரிந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 34வது படத்தில் கூடுதல் திரைக்கதை ஆசிரியராக பணிபுரியவுள்ளார்.

அதேபோல், இந்த படத்தில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story