ஆஸ்திரேலியாவில் லியோ படத்திற்கு 20,000 டிக்கெட்டுகள் விற்பனை

ஆஸ்திரேலியாவில் லியோ படத்திற்கு 20,000 டிக்கெட்டுகள் விற்பனை

லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் மட்டும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகின்றன. வரும் 19-ம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது

ஆஸ்திரேலியாவில் லியோ படத்திற்கு 20,000 டிக்கெட்டுகள் விற்பனை

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மட்டும் லியோ படத்திற்காக 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Share this story