2022 ஒர் பார்வை: இந்த ஆண்டு, கோலிவுட்டில் அதிக படங்கள் நடித்த நடிகர்கள்:

photo

இந்த ஆண்டு சினிமாதுறைக்கு வளர்ச்சி முகமான  ஒரு அண்டு என்றே சொல்லலாம், அதற்கு காராணம் பல பிளாக் பஸ்டர் படங்கள், பாக்ஸ் ஆபிஸ் படங்கள், டிரெண்ட் செட்டர் படங்கள் என கோலிவுட்டே புத்துணர்வோடு இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதி கட்டத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம், அதில் முக்கியமாக இந்த ஆண்டில் அதிக படங்கள் நடித்த ஹிரோக்களை காணலாம்.  இந்த பட்டியலில் முதலாவதாக:

photo

அசோக் செலவன்:  அசோக் செல்வன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஐந்து படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே நடித்தமன்மத லீலை’, சுமந்த ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்  பிரியாபவானி ஷங்கருடன் இணைந்து ‘ஹாஸ்டல்’, ரா கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வனுடன் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாத்மிகா இணைந்து நடித்த ‘நித்தம் ஒரு வானம்’, சந்தீப் ஷியாம் இயக்கத்தில் ‘வேழம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் மன்மத லீலை படத்தை தவிற மற்ற படங்கள் குறிப்பிடும் படியான விமர்சனங்களை பெற தவறின, இதனால் இந்த ஆண்டு அசோக் செல்வனிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை.

photo

விஜய்சேதுபதி:  மக்கள் செல்வனாக வலம் வரும் விஜய்சேதுபதி இந்த ஆண்டில் மொத்தமாக ஐந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா, சமந்தாவுடம் ‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘விகரம்’, சீனுராமசாமியின் ‘மாமனிதன்’, எம் மணிகண்டனின் ’கடைசி விவசாயி’ பொன்ராமின் ‘டி எஸ் பி’ என தமிழில் மட்டும் ஐந்து படங்கள், மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனால்  இந்த விஜய்சேதுபதிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது.

photo

அசோக்:   அசோக் இயக்கத்தில் இந்த ஆண்டு ஐந்து படங்கள் வெளியாகியுள்ளனர். அதில் கருப்பையா முருகன் இயக்கத்தில் ‘விடியாத இரவென்று வேண்டும்’, ரங்க குமார் இயக்கத்தில் ‘பெஸ்டி’, டி சம்பத் குமார் இயக்கத்தில் ‘மாயத்திரை’, கர்ணன் மாரியப்பன் இயக்கத்தில் ‘4554’, சரத் இயக்கத்தில் ‘தெற்கத்தி வீரன்’ ஆகும். இந்த ஆண்டு இவருக்கு சுமாரான ஆண்டாக அமைந்தது, காரணம் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

photo

ஜெய்இந்த பட்டியலில் அடுத்து நடிகர் ஜெய் இருக்கிறார், இவரது நடிப்பில் இந்த ஆண்டு மொத்தமாக ஐந்து படங்கள் வெளியாகின அதில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரபாண்டியபுரம்’, ‘குற்றம் குற்றமே’ ஆகிய படங்கள், சுந்தர் சி-யுடன் ஜெய் இணைந்து நடித்து பத்ரி இயக்கிய ‘பட்டாம் பூச்சி’ அடுத்ததாக வெற்றி செல்வன் இயக்கிய ‘எண்ணித் துணிக’, இந்த ஆண்டின் இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் பல நட்டத்திர பட்டாலமே நடித்த ‘காஃபி வித் காதல்’ என ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின, ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த  பாசிட்டிவான விமர்சனத்தை பெறவில்லை, அதனால் இந்த ஆண்டு நடிகர் ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும் படியான ஆண்டாக அமையவில்லை.

photo

தனுஷ்:  தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு கோலிவுட்டில்  மொத்தமாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின அதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் உடன் இணைந்து நடித்த ‘மாறன்’, மித்ரன்ஜவகர் ராஷிகண்ணா மற்றும் நித்தியா மேனன்னுடன் இணைந்து நடித்த ‘ திருச்சிற்றம்பலம்’ செல்வராகவன் இயக்கிய ‘நானேவருவேன்’. இது தவிர நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்த ‘தி கிரே மேன்’ படமும் ரிலீஸ் ஆகி தனுஷிற்கு இந்த ஆண்டு ஓகே சொல்லும் படியாக அமைந்துள்ளது.

photo

 விகரம்: நடிகர் விக்ரமிற்கு இந்த் ஆண்டு மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின அதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம்,அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கி, விக்ரம் பல கெட்டப்பில் நடித்த ‘கோப்ரா’, இந்த ஆண்டின் இறுதியாக மிகவுன் எதிர்பார்க்கப்பட்டு மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ இந்த படத்தில் ஆதித்திய கரிகாலனாக விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். படம் வேறலெவல் ஹிட்டானது, தொடர்ந்து விரைவில் PS2 வெளியாகவுள்ளது, இந்த ஆண்டு விக்ரமிற்கு பொன்னியின் செல்வனால் சூப்பர் என்று சொல்லலாம்.

photo

கார்த்தி: நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு முன்று படங்கள் வெளியாகின, பி எஸ் மித்திரன் இயக்கத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயனுடன் கார்த்தி நடித்த ‘சர்தார்’, அடுத்ததாக இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த  மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்1’இந்த படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ஏற்று அசத்தியிருந்தார், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதீ ஷங்கர் நடித்த ‘விருமன்’. இந்த ஆண்டு கார்த்திக்கு சூப்பர் ஹிட் ஆண்டு என்றே சொல்லலாம். வெளியான அனைத்து படங்களும் வசூல் வேட்டை நடத்தின.

photo

பிரபு தேவா: இந்த ஆண்டு பிரபுதேவா மொத்தமாக மூன்று படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வரலெட்சுமி சரத்குமார், ரைசாவில்சனுடன் இணைந்து நடித்த ‘பொய்கால் குதிரை’, சி சத்தியா இயக்கத்தில் சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு இணைந்து நடித்த ‘தேள்’, என் ராகவன் இயக்கத்தில் ‘மைடியர் பூதம்’. இந்த ஆண்டு பிரபு தேவாவிற்கு சுமாரான ஆண்டாக அமைந்துள்ளது.

photo

அருண் விஜய்: இந்த ஆண்டு அரும் விஜய் நடிப்பில் முத்தான மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின அதில் சரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் தனது மகன் அர்ணவ்வுடன்  இணைந்து நடித்த  ‘ஓ மை டாக்’, ஹரி இயக்கத்தில்  அருண்விஜய் பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, யோகிபாபு இணைந்து நடித்த ‘யானை’, குமரவேல் இயக்கத்தில் ‘சினம்’ ஆகிய படங்கள்  ரிலீஸ் ஆகி இந்த ஆண்டு அருண் விஜய்க்கு ஓகேவான ஆண்டாக அமைந்துள்ளது.

 

 

Share this story