சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தனுஷ்’ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

photo

அசாத்திய நடிப்பால் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்து கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இன்றுடன் சினிமாவில் நுழைந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

photo

2002 அம் ஆண்டு இதேநாளில் தனது தந்தையான ‘கஸ்தூரி ராஜா’ இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாக முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார் தனுஷ்.  ‘என்னது இந்த பையன் ஹீரோவா’ என கிண்டலாக கேட்ட பலருக்கு தனது விடாமுயற்சியால் காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தக்க பதிலடி கொடுத்தார் தனுஷ்.

photo

இவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி, பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். அதேப்போல கோலிவுட் தவிர, மலையாளம், தெலுங்கு, ஆங்கில மொழி படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார். இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வரும் தனுஷ் இன்றுடன் சினிமாவில் நுழைந்து 21ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிந்து வருகின்றனர்.

 

Share this story