21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.

photo

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் 14ஆம் தேதி முதல் 21 தேதி வரை நடக்க உள்ளது. இதில் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. சினி அப்ரிசேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்படும், அதில் 3 படங்கள் விருதை பெறும். அந்த வகையில் இம்முறை, அநீதி, அயோதி, கருமேகங்கள் கலைகின்றன, போர் தொழில், மாமன்னன், செம்பி, வி3, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், விடுதலை பாகம்1, உடன்பால், ராவணகோட்டம் , சாயாவனம் ஆகியவை ஆகும்.

photo

இந்த படங்கள் பிவிஆர், ஐநாக்ஸ்-சத்யம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. மேலும் ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாக்கு தமிழக அரசு 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை நிதி ஒதுக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு 85 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this story