22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா... ரசிகர்களுக்கு நன்றி கூறிய சாய் பல்லவி!

sai pallavi

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை வென்றார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்பட்டு பரிசுகளும் பெற்றது. அதன்படி அமரன் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது.

sai pallavi

அதே சமயம் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, “அமரன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு ராஜ்குமார் தான் காரணம். இந்த படம் வெளியான பிறகு கடந்த சில நாட்களாக அதிக அளவிலான அன்பை பெற்று வருகிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என்று பேசினார்.

Share this story