எவர் கிரீன்…… ‘அலைபாயுதே’ 23 ஆண்டுகள் நிறைவு.

photo

கோலிவுட்டில் எவர்கிரின் திரைப்படங்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய இடத்தில் மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ திரைப்படம் இருக்கும். 90’ஸ் , 2கே என அனைவரும் பார்த்து ரசித்த ‘அலைபாயுதே’ படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

photo

ஷக்தியிடம் கார்த்திக் காதலை வெளிப்படுத்தும் காட்சி அதனை ஓவர்டேக் செய்ய இன்று வரை எந்த காட்சியும் தமிழ் சினிமாவில் வரவில்லை. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் பார்பவர்களின் கண்கள் வழியே கடந்து மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும். அந்த அளவிற்கு ரம்மியமாக இருக்கும். படத்தின் பாடல் பற்றி சொல்லாமல் எப்படி…. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒவ்வொரு பாடல்களும் கேட்க கேட்க சலிக்காது. இன்றும் பலரது பிளே லிஸ்டை இந்த படத்தின் பாடல்கள் ரூல் செய்துகொண்டுதான் இருக்கிறது.

photo

பக்கத்து வீட்டு பெண் போன்ற ஷானியின் தோற்றம்,தங்கைக்கு எற்ற அக்கா, திருட்டு கல்யாணம், முறை பையன், காதல் வசனம் பேசும் மாதவன், மின்சார ரயில், அமெரிக்க மாப்பிள்ளை, பாதி கட்டிய வீடு, தாலியை கண்ணடியில் மாட்டிவைப்பது, நண்பர்கள், ஊடல், ஈகோ என படத்தைப்பற்றி கூறிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் படத்தின் 23ஆண்டுகள் நிறைவை ஒட்டி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

Share this story