" 25 Days of அராஜகம்..." டிராகன் படக்குழு மகிழ்ச்சி...!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடுகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
25 Days of Araajagam in theaters 🔥🔥#Dragon continues to rule & is unstoppable - Housefull shows in its 4th week! 🐉💥#25DaysOfDragon #MegaBlockbusterDragon
— AGS Entertainment (@Ags_production) March 16, 2025
Book Tickets Here 🎟️ : https://t.co/bDdKzKtM8v @pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A… pic.twitter.com/vrlpiAmxBS
மேலும் 2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்த 'விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தை ‘டிராகன்’ பிடித்தது. தற்போது தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குளில் 25வது நாளில் டிராகன் திரைப்படம் ஓடுகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரூ.37 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.