250 கோடியா ?... இணையத்தில் வெளியான 'வாரிசு' வசூல்..‌ வாயை பிளக்கும் ரசிகர்கள் !

varisu

விஜய்யின் 'வாரிசு 'திரைப்படம் 250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது. வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷ்யாம், ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய நடித்துள்ளனர். தமன் இசையில் உருவாகியிருந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தன. 

varisu

நெம்பர் ஒன் தொழிலதிபரான தனது தந்தையின் பிசினசை எதிரியிடமிருந்து காப்பாற்றும் இளைஞனாக விஜய் நடித்துள்ளார். இதில் ஆக்ஷன் மற்றும் குடும்ப உறவுகள் சார்ந்த எமோஷனலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாய் சென்று பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படம் 7 நாளில் 210 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.  இதற்கு காரணம் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வரும்‌ நிலையில் எப்படி அந்த வசூலை பெற்றிருக்க முடியும் என்று கடுமையாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதெல்லாம் ரசிகர்களை திருப்திப்படுத்த வெளியாகும் அறிவிப்புகள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் 12 நாளில் 250 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. 

Share this story