27 Years Of Suriyaism - சூர்யா 44 படத்தின் சிறப்பு போஸ்டர்
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.
#Suriya44 Special poster coming today at 5PM to celebrate #27YearsOfSuriyaism❤️🔥pic.twitter.com/xZkAXoQUGV
— AmuthaBharathi (@CinemaWithAB) September 6, 2024
A journey of determination that began with #NerrukkuNer has reached another milestone ❤️🔥#27YearsOfSuriya #27YearsOfSuryaism
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 6, 2024
Here's our wishes and love for completing 27 years #Suriya sir. Wish you more accolades and outstanding success 💖
From Team #Suriya44#LoveLaughterWar… pic.twitter.com/r5uuuDnDJz
படத்தில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா திரைத்துறையில் பணியாற்றி 27 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அதைப் கொண்டாடும் விதமாக ஒரு வீடியோவும். சூர்யா 44 படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாரகவுள்ளது. நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.