'2கே லவ் ஸ்டோரி' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்
சுசீந்திரன் இயக்கும் ‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சிம்புவை வைத்து கடைசியில் ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.
Thrilled to drop the first promo track of @disoundfactory from #2KLoveStory—How Is It Possible Bro? 🎧💥
— DI Sound Factory (@disoundfactory) November 15, 2024
Bringing fresh Gen Z vibes with @Arivubeing’s electrifying vocals. 💥🎙️@immancomposer#2KLoveStory #2KLS #VibeWith2k #Kadavuley #DISoundFactory #HowIsItPossible #ImmanMusic pic.twitter.com/EpCPhiaNtF
மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழுவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை சுசீந்திரன் அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடல் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளதை புரோமோ வீடியோவில் தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவை இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.