ரிப்பீட்….- இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த ‘மாநாடு’.
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘மாநாடு’. இந்த படம் சிம்புவின் சினிமா வாழ்கையில் முக்கிய படம் எனலாம். சிம்பு தனது செகண்ட் இன்னிங்சை துவங்கிய சமயத்தில் அவருக்கு பெரிதும் கைகொடுத்த இந்த படம் டைம் லூக் கதைகளத்தை மைய்யமாக கொண்டு உருவானது. தொடர்ந்து ஒரே காட்சிகள் அடிக்கடி வந்தாலும் கதைகளம் மேக்கிங் ஆகியவை அலுப்பை கொடுக்கவில்லை.
What an experience making this movie!!! Can never forget this for life!! Thanks to the team and my cast and crew!! Everyone involved in the release!! And spl thanks to cinema fans and #strbloods #maanaadu #2YearsOfMaanaadu #NewAgeCinema #aVPpolitics pic.twitter.com/m1oEugIOCQ
— venkat prabhu (@vp_offl) November 24, 2023
படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யா அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த நிலையில் இன்றோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த இந்த படத்தினை நினைவுகூர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அனைவருக்கும் நன்றி கூறி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.