விரைவில் ஓடிடிக்கு ஓடிவரும் வெற்றி படம் 3BHk-எந்த தேதியில் தெரியுமா ?

3bhk

சித்தார்த் ,சரத்குமார் ,தேவயானி ஆகியோரின் நடிப்பில் ஜூலை 4ம் தேதி 3 bhk படம் ரிலீஸ் ஆனது .இந்த படம் ஒரு நடுத்தர குடும்பம் ஒரு 3 பெட் ரூம் வீடு வாங்குவதற்கு படும் அவஸ்த்தைகளை அழகாக சொல்லியிருக்கிறது .இந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களின் பாத்திரங்களை உணர்ந்து அழகாக நடித்துள்ளனர் .இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன் 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.இந்த படத்தை பல ஹிட் திரைப்படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 3BHk திரைப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் 4 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகும். இந்நிலையில் தற்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கும் 3BHk திரைப்படம் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story