ரசிகர்களை கவர்ந்த 3 BHK பட விமர்சனம் .-பிரபலங்கள் பாராட்டு

ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப, சில படங்கள் ஜூலை 4ம் தேதி வெளியாகி இருக்கின்றன. அனைத்தும் குடும்ப கதைகளை கொண்ட படங்களாக இருக்கின்றன. இவற்றில் ரசிகர்களை கவர்ந்த படம் 3 BHK.
சித்தார்த், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 3 BHK. குடும்ப படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் மகனாகவும், சரத்குமார் தந்தையாகவும் நடித்துள்ளார். தேவயானி தயாார் கதாப்பாத்தித்திலும், மீதா ரகுநாத் மகள் கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.
படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 3 BHK-வின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது. இதனை பார்த்த பத்திரிகையாளர்கள் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கொடுத்திருக்கின்றனர்.
படத்தை பார்த்த ஒருவர், சித்தார்த் சைத்ரா இடையே இருக்கும் காதல் குறித்தும் சரத்குமாரின் நடிப்பு குறித்தும் பாராட்டி இருக்கிறார். மேலும், படத்தின் பாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உணர்வுகளுடன் கனெக்ட் ஆக தவறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும். இந்த படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்க நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்
இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்று நடிகர் சூரி கூட இப்படத்தை பாராட்டியுள்ளார்
மிடில் கிளாஸில் இருக்கும் அனைவருக்கும் இந்த படம் உணர்ச்சி பூர்வமாக கனெக்ட் ஆகும் .