சித்தார்த் நடிப்பில் வெளிவரும் புதிய படம் '3 பிஎச்கே"-வரவேற்பை பெற்ற ட்ரைலர் .

actor siddharth

பிரபல நடிகர் சித்தார்த்  ஒரு  திரைப்பட நடிகர்,மட்டுமல்ல பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். இவர் கன்னத்தில் முத்தமிட்டால் ,பாய்ஸ் ,காதலில் சொதப்புவது எப்படி ,லவ் பெயிலியர் ,ஆயுத எழுத்து ,அவள் ,ஜிகர்தண்டா ,தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின  40-வது படமாகும். இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Share this story