படம் வெற்றிபெற 3 BHK படகுழுவினர் என்ன செஞ்சாங்க தெரியுமா ?-நாளை பல படங்கள் வெளியீடு

3bhk

நடிகர் சித்தார்த்தின் 3 BHK படகுழுவினர் படம் பெரிய வெற்றிபெற வேண்டி காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்தனர் .
சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ள
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 3 BHK படம் வெற்றிபெற வேண்டி பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர் .இப்படம் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி ஒரு 3 பெட் ரூம் வீடு வாங்க சிரமப்படுகின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது .இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களை இப்படம் கண்ணீரில் நனைய வைத்துள்ளது .இப்படத்தை டப்பிங்கில் பார்த்த சரத்குமார் தான் டப்பிங்கில் கண்ணீர் விட்டதாக கூறினார் 
நாளை  3 பிஎச்கே படத்துடன் அகேனம் , அனுக்கிரகன் , குயிலி , பறந்து போ , பீனிக்ஸ் ,ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த் ,தம்முடு , மெட்ரோ , ஜங்கர் போன்ற பத்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது ,அதனால் நாளை சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான் என்று சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர் 

Share this story