ஹீரோவான 3 காமெடியன்களின் படம் இன்று ரிலீஸ்...!

comedian

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க, லெவன் உள்ளிட்ட 4 படங்கள் தமிழ் சினிமாவில்  இன்று வெளியாகி உள்ளது. 

 
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்கள் சந்தானம், சூரி, யோகி பாபு. ரசிகர்களின் தனி கவனம் பெற்ற இவர்கள் பின்னாளில் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தற்பொழுது முழுக்க முழுக்க தன்னை முன்னிலைப்படுத்திய ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மே 16ஆம் தேதி இன்று சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய மூன்று பேரும் ஹீரோவாக நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் திரைக்கு வர உள்ளது. நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல். இதில் கௌதம் வாசுதேவன் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார். கோவிந்தா பாடலை மையப்படுத்தி kisa 47 என்ற பாடலுக்கு சர்ச்சை எழுந்த நிலையில் படத்திலிருந்து அப்பாடலை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. santa

விலங்கு இணைய தொடரின் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி நாளை திரைக்கு வர உள்ள படம் மாமன். இப்படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார். ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சூரி கொடுமை செண்டிமெண்டில் வெற்றியை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. maman

விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் யோகி பாபு மேஜிசியனாக நடித்துள்ள ஜோரா கைய தட்டுங்க படமும் நாளை திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லெவன். தமிழ் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படமும் இன்று வெளியானது.  

yogiமுன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இந்த மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ள உள்ள நிலையில் எந்த படம் வெற்றி பெறும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this story