லியோ படத்தில் இன்னும் 3 பாடல்கள்.... லோகேஷ் கனகராஜ் தகவல்...

லியோ படத்தில் இன்னும் 3 பாடல்கள்.... லோகேஷ் கனகராஜ் தகவல்...

லியோ படத்தில் இதுவரை வெளியானது போக, இன்னும் 3 பாடல்கள் இருப்பதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லியோ படத்தில் இன்னும் 3 பாடல்கள்.... லோகேஷ் கனகராஜ் தகவல்...

படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், வெளியான இரண்டு பாடல்கள் போக இன்னும் லியோ படத்தில் 3 பாடல்கள் இருப்பதாகவும், அவை அனைத்துமே கதையுடன் இணைந்து அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story