புனே சர்வதேச விழாவில் மூன்று தமிழ் படங்கள்!
1703414834160
புனேவில் நடக்க உள்ள 22வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் பிரிவில் 3 படங்கள் திரையிடப்பட உள்ளது.
சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது புனேவில் 22வது சர்வதேச திரைப்பட விழா நடக்க உள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் தமிழ் பட பிரிவில் 3 படங்கள் திரையிடப்பட உள்ளன. அவை வெற்றிமாறனின் விடுதலை, சீனு ராமசாமியின் இடி முழக்கம் மற்றும் காதல் என்பது பொதுவுடமை ஆகிவை ஆகும். இது தவிர ஜோதிகா-மம்மூட்டி நடிப்பில் வெளியான காதல் தி கோர் படம் ஜோஜு ஜார்ஜ் நடித்த இரட்டா ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.