ஆஸ்கர் நாயகனுக்கு அங்கீகாரம் ‘ARR திருவிழா’ – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.

photo

1992 ஆம் ஆண்டு ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக சினிமாதுறைக்குள் நுழைந்தவர் ஏஆர் ரஹ்மான். அன்றிலிருந்து இன்றுவரை இசையால் நம்மை மகிழ்விக்கும் ஏஆர் ரஹ்மானை போற்றும்வகையில் ‘ARR  திருவிழா’ எனும் நேரடி இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

photo

 சுமார் 30 ஆண்டுகள் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து  கணக்கில்லா விருதுகளை வென்ற நமது ஆஸ்கர் நாயகனை போற்றும் விதமாக ACTC Events, Aasett மற்றும் Orchid production ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிதான் இந்த ‘ARR  திருவிழா’. சுமார் 5 வருடங்களுக்கு பிறகு நடக்கும் ARRன் ஒரு நேரடி இசை நிகழ்ச்சி இதுவாகும். இந்நிகழ்ச்சியின்  கூடுதல் சிறப்பாக ‘ARR திரைப்பட திருவிழா’ என்ற பெயரில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான 20 திரைப்படங்களை PVR சினிமாஸ்  திரையிடப்பட உள்ளனர். ஆகஸ்ட் 4 முதல் 9 வரை சென்னையில் சுமார் 5 திரையரங்குகளிலும், கோவையில் 2 திரையங்குகளிலும் திரையிடப்பட உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.இந்த தகவலை அறிந்த ஏஆர் ரஹ்மானின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இது குறித்து ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில் "30 ஆண்டுகால அன்பைக் கொண்டாடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும், அருகிலும் தொலைவிலும் நான் பெற்ற அபாரமான அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. இந்தப் பயணம் முழுவதும் உங்கள் கருணையும், அரவணைப்பும் என் இதயத்தைத் தொட்டன. இன்னும் பல வருட நேசமான நினைவுகள் இதோ" என பதிவிட்டுள்ளார். 

Share this story