ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயம் பரிசு!

ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயம் பரிசு!

'ஜெயிலர்' படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயம் பரிசு!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் 'ஜெயிலர்' திரைப்படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, அவர்களுடன் அமர்ந்து விருந்து அருந்தியும் கொண்டாடினார். 

Share this story