சினிமாவில் 31ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி ‘விஜய்’- கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 31ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
விஜய் என்னதான் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஹீரோவாக அறிமுகமானது 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலமாக தான். பூவே உனக்காக, லவ் டுடே,நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, பிரியமானவளே, குஷி, ஷாஜகான், வசீகரா, யூத், பகவதி, புதிய கீதை, கில்லி, சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, ஆதி என தொடர்ந்து காதல் மற்றும்ஆக்ஷனில் களமிறங்கி பட்டையை கிளப்ப துவங்கினார் விஜய்.
என்னதான் சூப்பர் ஹிட் படங்கள், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் கொடுத்தாலும் விஜய்யின் சினிமா வாழ்க்கையும் 2007 லிருந்து 2012 வரை சருக்கலை சந்தித்தது. அப்போது தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படம் மூலமாக மீண்டு வந்தார் விஜய், அடுத்து துப்பாக்கி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவரை அசைக்க முடியாத இடத்திற்கு இட்டு சென்றது.
அதிலிருந்து அவரது படங்கள் அரசியல் பேச துவங்கியதால் விஜய் படம் என்றாலே அரசியல் இருக்கும் என்ற கருத்து பொதுவாக எழ துவங்கியது.அதுமட்டுமல்லமல் தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக விஜய் மக்களுக்கு பல உதவிகளையும் செய்ய துவங்கினார். அவரது இந்த நகர்வுகள் அரசியலை குறிவைத்து இருப்பதால் அடுத்த முதல்வர் விஜய் அண்ணா தான் என அவரது ரசிகர்கள் கூற துவங்கியுள்ளனர். சினிமாவில் நாளைய தீர்ப்பு படம் மூலமாக யார் இந்த பையன் என ரசிகர்களை பார்க்க வைத்த விஜய். இன்று அவரது அடுத்தடுத்த படங்களில் அப்டேட்டுக்காக கோடான கோடி ரசிகர்களையும் காக்க வைத்துள்ளார்.