3BHK படத்தின் 'கனவெல்லாம்' பாடல் ரிலீஸ்..!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள 3 பிஎச்கே படத்தின் 'கனவெல்லாம்' பாடல் வெளியாகி உள்ளது.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்தியன் - 2, மிஸ் யூ படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதைத்தொடர்ந்து, சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் . எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்தார். இப்படத்தில் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
All our dreams will come true, oneday.😇#Kanavellam Nijamaaga oru naalum aagum, SONG OUT NOW. 🎼
— R Sarath Kumar (@realsarathkumar) May 21, 2025
▶️ https://t.co/KsywtDT4Zm
Happy to introduce @amritramnath23 in Tamil ! ✨️#3BHK #3BHKFirstSingle#Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani @RaghunathMeetha… pic.twitter.com/stULKO6Xss

மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீடு கனவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்கு 3பிஎச்கே எனப் பெயரிடப்பட்ட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 3BHK திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் '3 பிஎச்கே' திரைப்படத்தின் முதல் பாடலான 'கனவெல்லாம்' வெளியாகி உள்ளது.