நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

நாளை ஒரே நாளில் முன்னணி நட்சத்திரங்களின் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. 

 ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தும் உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கும் இப்படத்தில் விஜய் குமாருடன் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் நாளை  வெளியாகிறது.

நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

ஸ்கைமூன் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் இஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கண்ணகி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 4 பெண்களின் வாழ்கை காட்டப்படுகிறது. இத்திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது. 

நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்கள் வெளியீடு

இதேபோல, ஆலம்பனா திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநரான பார்.கே.விஜய் இயக்கத்தில், டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘ஆலம்பனா’. படத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு கதாநாயகியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். நடிகர் முனிஸ்காந்த் பூதமாக நடித்துள்ளார். அலாவுதீனும் அற்புத விளக்கும் கான்செப்ட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இதேபோல சசிகுமார் மற்றும் சரத்குமார் நடித்திருக்கும் நா நா திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளது.

Share this story