சந்திரமுகி படத்தின் 480 ஷாட்கள் காணவில்லை... பரபரப்பு தகவல்

சந்திரமுகி படத்தின் 480 ஷாட்கள் காணவில்லை... பரபரப்பு தகவல்

சந்திரமுகி 2 படத்தின் வெளியீடு தள்ளிப்போனதிற்கு இயக்குநர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

null


இந்நிலையில், சந்திமுகி படத்தின் வெளியீட்டு தேதி 15-லிருந்து 28-ம் தேதிக்கு மாற்றியது குறித்து பி.வாசு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். படத்தின் பைனல் காப்பியை பார்க்க முடிவு செய்தபோது, திடீரென 480 ஷாட்கள் காணாமல் போனதாகவும், கிட்டத்தட்ட 5 நாட்கள் தீவிரமாக தேடி அதனை கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுவே பட வெளியீட்டுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Share this story