‘டிஎன்ஏ' படத்துக்கு 5 இசை அமைப்பாளர்கள்
1728384330000

ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், அடுத்து இயக்கும் படம், 'டிஎன்ஏ', அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜிப்ரான் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு 5 பாடல்களுக்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. பின்னணி இசையை ஜிப்ரான் இசை அமைக்கிறார்.