‘அது தான் கணக்கு, புரியுதா உனக்கு…’ தளபதி 67’ குறித்து பதிவிட்ட தயாரிப்பு நிறுவனம்.

photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் குறித்து ட்வீட் ஒன்றைபோட்டு ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளனர்.

photo

அதாவது லியோ திரைப்படம் தளபதி விஜய்யின் 67வது படமாக உருவாகிவருகிறது.  பெயரிடுவதற்கு முன்னர் அப்படித்தான் அழைக்கப்பட்டது. இதைவைத்துதான் இன்றைய செய்தியே இருக்கிறது. அதாவது ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “  மாலை 6.07 மணியளவில்தான்  உணர்ந்தோம் தளபதி விஜய்யின் 67வது படமான லியோ திரைக்குவர இன்னும் 67 நாட்கள் மட்டுமே உள்ளது 67DaysForThalapathy 67 அது தான் கணக்கு, புரியுதா உனக்கு” என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.


இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story