கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் திரைக்கு வரும் 7 படங்கள்...!

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 7 படங்கள் திரைக்கு வருகிறது.
விஜய் சேதுபதியின் ஏஸ், டொவினோ தாமஸ் நடித்துள்ள நரி வேட்டை, யோகி பாபுவின் ஸ்கூல், மையல், அகமொழி விதிகள், ஆகக் கடவன , திருப்பூர் குருவி ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் இந்த வாரம் 7 படங்கள் திரைக்கு வருகிறது. அதில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பப்லு, பிரபல கன்னட நடிகை ருக்மிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஸ். இப்படத்திற்கான பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க. பின்னணி இசை சாம் சி எஸ் அமைத்துள்ளார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. முழுக்க முழுக்க மலேசியாவில் தயாராகி உள்ள இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் ருக்மணி வசந்த். நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்படம் திரைக்கு வர உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனுராஜ் மனோகர் இயக்கத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில், உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் நரி வேட்டை. இதில் சுராஜ் வெஞ்சார மூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகரும் இயக்குனருமான சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும் படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் இப்படமும் நாளை திரைக்கு வருகிறது. இப்படங்களுடன் யோகி பாபுவின் ஸ்கூல், மையல், அகமொழி விதிகள், ஆகக் கடவன , திருப்பூர் குருவி உள்ளிட்ட படங்கள் நாளை திரைக்கு வருகிறது.
அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் நாளை திரைக்கு வர இருந்த படை தலைவன் திரைப்படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக தற்காலிகமாக தள்ளிப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.