நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் ரிலீஸ்!
ஆகஸ்ட் 14-ந் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் திரைக்கு வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பது எழுந்திருக்கும் நிலையில் அதற்கு முன்பாக ஏராளாமான சிறிய பட்ஜெட் படங்கள் (ஆகஸ்ட் 1) நாளை திரைக்கு வருகின்றன.

ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் மற்றும் காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ள ஹவுஸ் மேட்ஸ் நாளை திரைக்கு வருகிறது இதனை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன் வழங்குகிறது. சின்னத்திரை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் பட்டியலில் உதயா - யோகிபாபு நடித்த அக்யூஸ்ட், வெற்றி நாயகனாக நடித்துள்ள முதல் பக்கம், புதுமுகங்கள் நடித்துள்ள போகி, எம்.ஸி ஜோசப் இயக்கத்தில் கதிர் நாயகனாக நடித்து மலையாளத்தில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள மீஷா, டிஜே அருணாச்சலம் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஜோடியாக நடித்த உசுரே, பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள சரண்டர் உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்களும் அந்த பட்டியலில் அடங்கும். தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ஜெர்சி பட இயக்குனரின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனுடன் தனுஷ் நடித்த முதல் இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான அம்பிகாபதியும் நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இப்படத்தின் இறுதிக் காட்சிகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி அமைத்துள்ளதாக வெளியீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

