விரைவில் உருவாகிறது ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம்.. தயாரிப்பாளரின் சூசக தகவல் !

7g rainbow colony

‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். 

7g rainbow colony

ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று இப்படம் தெலுங்கில் உருவாகி வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் எண்ணம் இருப்பதாக கூறினார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Share this story