இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‛7ஜி ரெயின்போ காலனி 2'...!

7g rainbow

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும்  ‛7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் படபடப்பிடிப்பு விரைவில் நிறைவு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் இயக்குனர் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார். 7g rainbow colony

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவு பெற்றுள்ளதாகவும்,  இன்னும் சில நாட்களில் மொத்தமாக முடிவடையும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


 

Share this story