அட...‘7ஜி ரெயின்போ காலனி 2’ ஹீரோயின் இவங்களா ?..

7g rainbow colony
‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக பிரபல நடிகை நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். 

7g rainbow coloby

ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று இப்படம் தெலுங்கில் உருவாகி வெற்றிப்பெற்றது. 

 7g rainbow coloby

இந்த படத்தின் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு  ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான பணிகளில் இயக்குனர் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஆனால் ஹீரோயினாக சோனியா அகர்வால் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் அது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story