உடலை குறைக்கும் நடிகர் ரவி கிருஷ்ணா.. ‘7ஜி ரெயின்போ காலனி 2’ குறித்து புதிய அப்டேட் !

7g rainbow colony

‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக உடல் எடையை நடிகர் கிருஷ்ணா குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செல்வராகவனின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘7ஜி ரெயின்போ காலனி’. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார்.

7g rainbow colony

இந்த படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் விரைவில் படத்தை முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது உடல் கூடியிருக்கும் அவர் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். அதேநேரம் ஹீரோயின் குறித்த தகவல் இல்லை.   

Share this story