அப்போ அந்த நடிகை இல்லையா ?.. ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தில் இணைந்த மலையாள நடிகை !
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவனின் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று ‘7ஜி ரெயின்போ காலனி’. ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக மலையாள இளம் நடிகை அன்ஸ்வரா ராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழில் ‘ராங்கி’ படத்தில் அன்ஸ்வரா ராஜன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.