‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தை தொடங்குவதில் சிக்கல்... காரணம் என்ன தெரியுமா ?
‘ரெயின்போ காலனி 2’ படத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவாகவும், அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்திற்கான லுக் டெஸ்ட்டை இயக்குனர் செல்வராகவன் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்சனையால் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.