அப்படிப்போடு! - உருவாகிறதா செல்வராகவனின் '7/G ரெயின்போ காலனி 2'!

photo

செல்வராகவன் இயக்கத்தில் 7/G  ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

photo

 செல்வராகனின் படைப்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘7/G  ரெயின்போ காலனி’ இந்த படத்தில் ரவி கிருஷ்ணா- சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்துமே இன்றுவரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என செல்வராகவன் கூறியிருக்கிறார். பலரும் இந்த கதை செல்வராகனின் வாழ்வில் நடந்தது என கதைத்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது ரசிகர்களுக்கு மகிழ்சியை எற்படுத்தியுள்ளது.

photo

புதுபேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்றும் எதிர்பார்க்காத விதமாக 7/G  ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகி ஒரு நொடி உறைய வைத்துள்ளது.  படத்தின் கதாநாயகனாக ரவி கிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம், அவர் ஓகே சொல்லிவிட்டால்  படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி விடுமாம்.

Share this story