7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம்

7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம் 

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்தார். அவரது மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். ஹவுசிங் போர்டில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இந்த படம். வேலையில்லாமல் சுற்றி திரியும் ஒரு இளைஞன் தனது காதலால் எப்படி மாறுகிறார் என்பது அழகான காட்டப்பட்டிருக்கும். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு  ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. 

7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராகவன்,  ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. 

Share this story