ஒன்றுக்கூடும் 8 மொழி திரை நட்சத்திரங்கள்... தொடங்கிறது 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' !

celebrity cricket League

8 மாநில திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' விரைவில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சிறந்த பொழுதுப்போக்காக இருப்பவை சினிமாவும், கிரிக்கெட்டும். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தால் எப்படி இருக்கும். அதை பூர்த்தி செய்ய வருகிறது 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்'. இந்த கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கிறது. இதன் தொடக்கவிழா பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 

celebrity cricket League

இந்தியாவில் உள்ள 8 மொழி திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். அதில் ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர். மேலும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாகவும், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்க, போனி கபூர் உரிமையாளரான பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கேப்டனாக ஜிசுசென் குப்தா, கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர்.

celebrity cricket League

இந்த போட்டிகள் ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்கள் 19 ஆட்டங்களை நடத்தவுள்ளன. 120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். மும்பை ஹீரோஸ் போட்டிகள் & பிக்சர்ஸ் இந்தி, பஞ்சாப் தி ஷேர் போட்டிகள் PTC பஞ்சாபியிலும், தெலுங்கு வாரியர்ஸ் போட்டிகள் Zee சினிமாவிலும், சென்னை ரைனோஸ் போட்டிகள் Zee திரையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ் போட்டிகள் ஜீ பங்களா மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டிகள் ஃப்ளவர்ஸ் டிவியிலும் ஒளிபரப்பப்படும்.

Share this story