உலகளவில் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த சமந்தா படம் -எந்த படம் தெரியுமா ?

samantha

நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் மிக பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள பான் வேர்ல்ட் படம் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா ஆகிய 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் அந்த 5 நடிகைகளின் அறிமுக வீடியோ ‘லேடிஸ் அண்ட் லேடிஸ்’ என்ற பெயரில் டீசராக வெளியானது. அதில் ருக்மிணி வசந்த்தின் தோற்றம் அவரது முந்தைய படங்களை விட வித்தியாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தனது ஜூன் மாத போட்டோ தொகுப்பை பகிர்ந்துள்ளார் ருக்மிணி வசந்த். அந்த போட்டோ வரிசையில், சமந்தா நடிப்பில் வெளியாகி சமீபத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘மா இன்ட்டி பங்காரம்’ படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த போட்டோவும் இடம் பெற்றிருந்தது. மேலும், அப்படத்தை பற்றி ‘ஒவ்வொரு நிமிடமும் அதற்கு தகுதியானது’ என ருக்மிணி வசந்த் பாராட்டியுள்ளார். இதன்மூலம் ‘மா இன்ட்டி பங்காரம்’ படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிகிறது. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியான அப்படம் உலகளவில் ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ என்ற படத்திலும் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.. 

Share this story