சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ பட டீசர் வெளியானது!
1699114738920

சந்தானம் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘80ஸ் பில்டப்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பிரபுதேவாவின் குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கல்யான் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘80ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், முனீஷகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் தயாரான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் 80களின் காலகட்டத்தில் கதை நடப்பது நன்கு தெரிகிறது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.