ஓடிடி-யில் இலவசமாக காணலாம் முத்தையா முரளிதரனின் ‘800’.

photo

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

photo

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அசைக்க முடியாத தூண் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இவரது வாழ்கை வரலாற்று படம் தான் ‘800’ இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் ஈழப்போர் பிரச்சனையில் முத்தையா இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் தமிழகம் முழுவதும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என கண்டன குரல் எழுந்தது. அதன் பொருட்டு அவர் அந்த படத்திலிருந்து விலகினார்.


தொடர்ந்து ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டலை இந்த படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தார் இயக்குநர் ஸ்ரீபதி. படம் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் படம் வரும் டிசம்பர்2ஆம் தேதி ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதை அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் 800 படத்தை ஜியோ சினிமாஸில் இலவசமாக காணலாம் என்பதுதான்.

Share this story