சத்தமே இல்லாமல் ஓடிடி தளத்தில் ரிலீஸான சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’.
1703243163092

சந்தானம் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவான ‘80ஸ் பில்டப்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பிரபுதேவாவின் குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கல்யான் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘80ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், முனீஷகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் தயாரான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் தற்போது ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.