ஒன்றுக்கூடிய 80-ஸ் திரைப்பிரபலங்கள்... ரீயூனியன் புகைப்படங்கள் வைரல் !

80s

இந்திய சினிமாவில் 80-களில் பிரபலமாக இருந்த திரைப்பிரபலங்கள் ஒன்றுக்கூடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

1980-ஆம் ஆண்டுகளில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த திரைப்பிரபலங்கள் ஒன்றுக்கூடி தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் வீட்டில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சந்திப்பு நடைபெற்றது. 

80s

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா காரணமாக இந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ‘80-ஸ் ரீயூனியன்’ திரைப்பிரபலங்களின் சந்திப்பு இந்த ஆண்டு மும்பையில் நடைபெற்றது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் ஏற்பாட்டில் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர். 

80s

இந்த நிகழ்வில் பிரபலங்கள் தங்களது நட்பை புதுப்பித்து கொண்டனர். அப்போது அந்த கால நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். இதில் விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டிகளில் நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டு விளையாடினார். தற்போது இந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story