சந்தானத்தின் '80ஸ் பில்டப்' பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

photo

நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான படம் 80ஸ் பில்டப், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photoஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பிரபுதேவாவின் குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கல்யான் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘80ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், முனீஷகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் தயாரான இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நேற்று படம் வெளியானது.

படம் ஒரு புறம் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தாலும் மறுபுறம் படத்தின் காமெடி எடுபடவில்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் படம் முதல் நாளில் 1.2கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story