இரண்டு நாட்களில் 80ஸ் பில்டப் படம் செய்த வசூல் விவரம்!

photo

சந்தானம் நடிப்பில் திரைக்கு வந்த 80ஸ் பில்டப் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், பிரபுதேவாவின் குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கல்யான் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘80ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா பிரீத்தி, கே எஸ் ரவிகுமார், முனீஷகாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் தயாரான இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் படம் வெளியானது.

படம் முதல் நாளில் ரூ. 1.2கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளில் ரூ 1கோடி வரை வசூல் செய்துள்ளது மொத்தமாக படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூ2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Share this story