பிளாக்மெயில், தணல் உள்ளிட்ட 9 படங்கள் நாளை ரிலீஸ்

ழ்

ஜி.வி பிரகாஷின் பிளாக்மெயில், அதர்வாவின் தணல், அர்ஜுன் தாஸின் பாம், சின்னத்திரை நடிகர் குமரன் ஹீரோவாக அறிமுகமாகும் குமார சம்பவம், காயல், யோலோ, தாவுத், மதுரை 16, உருட்டு உருட்டு ஆகிய படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.


தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 9 படங்கள் திரைக்கு வருகிறது. ல நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், சிவாத்மிகா, காளி வெங்கட், நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பாம். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமான தயாராகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தணல். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன் மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மேலும் இதில் அஸ்வின் ககுமனு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இப்படம் நாளை திரைக்கு வருகிறது. 

“குமார சம்பவம்”: திரைப்பட விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பிளாக்மெயில். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் மூலம் பிரபலமான குமரன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ள படம் குமார சம்பவம். நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.தமயந்தி இயக்கத்தில் லிங்கா, காயத்ரி நடித்துள்ள படம் காயல். காதல் படமாக உருவாகியுள்ள இந்த படமும் நாளை வெளியாக உள்ளது.நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் நாயகனாக நடித்துள்ள படம் உருட்டு உருட்டு. பாஸ்கர் சதாசிவம் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடிப் பழக்கத்துக்கு எதிராக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படமும் நாளை வெளியாகிறது. 

“யோலோ” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது

மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், உருவாகியுள்ள படம் யோலோ. இந்த படத்தை சாம் இயக்கியுள்ளார். ரொமான்ஸ் காமெடி ஜானரில், பேண்டஸி கலந்த கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்த படத்தில் தேவ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தேவிகா, படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படமும் நாளை வெளியாகிறது.மேலும் தாவுத், மதுரை 16 தெலுங்கு டப்பிங் படமான மிராய் ஆகிய படங்களும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story